அடிக்கடி மின்தடை அவதிப்படும் மக்கள்

 

விருதுநகர், மே 19: விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காலை, இரவு நேரங்களில் அடிக்கடி திடீர் மின்தடை ஏற்படுகிறது. லேசான மழை பெய்தாலே மின் துண்டிப்பு செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கும், வர்த்தக நிறுவனங்களிலும், அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மின் துண்டிப்புக்கான காரணம் பற்றி எந்த தகவலும் மின்சார வாரியத்தால் பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பது இல்லை என கூறப்படுகிறது.

முன்னறிவிப்பின்றி தொடர்ந்து பகல், இரவு நேரங்களில் அடிக்கடி திடீர் மின்வெட்டு ஏற்படுவதால் வீட்டில் இருக்கும் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் வெயிலின் தாக்கதால் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து மின்வாரிய துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.

Related Stories: