பிரதமர் மோடிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை: காங். தலைவர் கார்கே கடும் தாக்கு

 

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தன் எக்ஸ் பதிவில், “தேர்தலுக்கு முன், பிரதமர் மோடி பெட்ரோல், டீசல் மற்றும் பிற பொருள்களின் விலையை உயர்த்தியிருந்தால், அவர் கணிசமான இழப்புகளை சந்தித்திருப்பார். அதனால் தான் மோடி அரசாங்கம் தேர்தல்கள் முடியும் வரை அனைத்தையும் மறைத்து வைத்திருந்து, பின்னர் எல்லாவற்றின் விலையையும் உயர்த்தி உள்ளது.

பாஜ அரசுக்கும், மோடிக்கும் தொலைநோக்கு பார்வை இல்லை. அதனால்தான் இந்த விலை உயர்வை எதிர்பார்க்கவில்லை. விலைவாசி உயர்வால் நாட்டில் உள்ள ஏழை மக்கள் தங்களின் அத்தியாவசிய பொருள்களை கூட வாங்க முடியவில்லை. பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த பிரச்னையை நாங்கள் எழுப்புவோம்” என்றார்.

Related Stories: