ரூ.150 கோடி வங்கி மோசடி வழக்கு; கோவா ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி கைது: அமலாக்கத்துறை அதிரடி

 

புதுடெல்லி: ஆம்ஆத்மி கட்சியின் மூத்த நிர்வாகி தீபக் சிங்லா. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார். தற்போது கோவா தேர்தலுக்காக ஆம்ஆத்மி கட்சி சார்பில் உழைத்து வருகிறார். இவர் மீது ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்சில் ரூ.150 கோடி பண ேமாசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக 2024ஆம் ஆண்டு இவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. நேற்று மீண்டும் தீபக் சிங்லா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

டெல்லி மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களிலும் பல ஹவாலா தரகர்களுடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கோவா தேர்தலுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: