சென்னை: நாளை மறுநாள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது வரும் ஜுன் மாதம் பள்ளிகளை திறப்பது தொடர்பாகவும் முதலமைச்சர் விஜய் கலந்தாலோசித்தார்.
