×

அரசியல் சாசன அமர்வு விசாரணை நிறைவு சபரிமலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

 

புதுடெல்லி: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் தொடர்பான வழக்கானது 16வது நாளாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதில் சபரிமலை தொடர்பான வழக்கை ஏப்ரல் 7ம் தேதி துவங்கி இன்று(நேற்று) வரையில் சுமார் 16 நாட்கள் உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Tags : Political Charter Session ,Sabarimala ,New Delhi ,Supreme Court ,Session ,Iyapan Temple ,
× RELATED பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள்...