- கெஜ்ரிவால்
- புது தில்லி
- சிபிஐ
- தில்லி உயர் நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- ஆம் ஆத்மி கட்சி
- ஆம் ஆத்மி
- துணை முதலமைச்சர்
- சிசோடியா
- தில்லி
- நீதிபதி
- ஸ்வர்ணா…
புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா அமர்வில் ஆஜராக கெஜ்ரிவால் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கெஜ்ரிவால், சிசோடியா உள்ளிட்டோர் மீது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையை தொடங்கப் போவதாக நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா அறிவித்தார். கெஜ்ரிவால் சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரத்தை அரங்கேற்றுவதாக கூறிய நீதிபதி, கருத்து சுதந்திரம் என்ற போர்வையில், நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் உள்நோக்கத்துடன் கூடிய முயற்சி எதையும் அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளார்.
