×

குட்டை பாவாடை அணிந்து குத்தாட்டம் மருமகள் ஆபாச ரீல்ஸ் வீடியோ மாமனார், மாமியார் தற்கொலை

 

பானிபட்: அரியானாவில் குட்டை பாவாடை அணிந்து குத்தாட்டம் போட்ட மருமகளின் ரீல்ஸ் வீடியோவால் விரக்தியில் மாமனார், மாமியார் தற்கொலை செய்து கொண்டனர். அரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் நாரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (46). இவரது மனைவி சுமன் (44). இவர்களது மகன் ஆஷிஷ், கடந்தாண்டு சினேகா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். சினேகா, சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அந்த கிராம மக்கள் பாரம்பரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இந்நிலையில், சினேகா தொடர்ந்து குட்டையான ஆடைகளை அணிந்து கொண்டு, வீடியோக்களை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.

இதற்கு அவரது மாமனார், மாமியார் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சினேகா ஆத்திரமடைந்து மாமனார், மாமியாரை தாக்கினார். இதில் மனமுடைந்த மாமனார், மாமியார் விஷம் குடித்து பலியானார்கள். இது குறித்து ராஜேஷின் சகோதரர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Panipat ,Haryana ,Rajesh ,Nara ,Panipat district ,Suman… ,
× RELATED பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள்...