×

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உடையணிந்து வாதாடினார் மம்தா பானர்ஜி: ‘திருடி’ என சிலர் கோஷமிட்டதால் பரபரப்பு

 

 

கொல்கத்தா: தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பான வழக்கில் வழக்கறிஞர் உடையுடன் ஆஜரான மம்தா பானர்ஜி ஆவேசமாக வாதாடினார். நீதிமன்ற வளாகத்தில் சில வழக்கறிஞர்கள் அவரை நோக்கி ‘திருடி’ என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி சட்டம் படித்து பட்டம் பெற்றவர். கடந்த பிப்ரவரி மாதம், எஸ்ஐஆருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அவர் ஆஜராகி வாதாடினார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் தொடர்பான வழக்கில் மம்தா பானர்ஜி நேற்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உடையுடன் ஆஜரானது பரபரப்பை ஏற்படுத்தியது. மம்தாவுடன் வழக்கறிஞரும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான சந்திரமா பட்டாச்சார்யா, கல்யாண் பானர்ஜி ஆகியோரும் உடனிருந்தனர்.

சட்டப்பேரவை தேர்தலில் உத்தர்பாரா தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரும் கல்யாண் பானர்ஜியின் மகனுமான சிர்சான்யா பந்தோபாத்யாய் தாக்கல் செய்த வழக்கில் மம்தா ஆஜராகி வாதாடினர். அவர் தனது வாதத்தில், மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையின் போது காவல்துறை செயலற்று இருந்ததாகவும், மேற்கு வங்கம் ஒன்றும் புல்டோசர் மாநிலம் அல்ல என்றும் அவர் ஆவேசமாக கூறினார்.இந்த வழக்கின் இடைக்கால உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வழக்கில் ஆஜராகி விட்டு மம்தா வெளியே வந்த போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த சில பாஜ ஆதரவு வழக்கறிஞர்கள் ‘திருடி, திருடி’ என கோஷமிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

 

Tags : Mamata Banerjee ,Calcutta High Court ,Kolkata ,Former ,West Bengal ,Chief Minister… ,
× RELATED பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள்...