கொல்கத்தா: மேற்குவங்கத்தில் தற்போது சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜ ஆட்சி அமைத்துள்ளது. இங்கு தற்போது தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் மேற்குவங்கத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாள்தோறும் காலையில் வந்தே மாதரம் பாடல் பாடுவதை மாநில பாஜ அரசு கட்டாயமாக்கி உள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை வௌியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், மேற்குவங்கத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலைநேர கூட்டங்களில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம் பாடப்பட வேண்டும். பள்ளி நாள் தொடங்கும்போது ஒவ்வொரு மாணவரும் தேசிய பாடலை பாடுவதில் பங்கேற்க வேண்டும். இந்த நடைமுறை கண்டிப்பாக பின்பற்றப்படுவதை கல்வி நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
