41 பேருக்கு கொரோனா

கோவை,மார்ச்2:  கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 41 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையை சேர்ந்த 41 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 799 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 42 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை கொரோனாவில் இருந்து 54 ஆயிரத்து 737 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 379 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories:

>