அனுமதி இன்றி விற்பனை செய்ய பைக்கில் பதுக்கியமது பாட்டில்கள் பறிமுதல்

தா.பழூர்மே 13: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் தலைமையிலான காவல்துறையினர் ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது கூத்தாடி ஏரிக்கரை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த தாமரைக்கண்ணன் (28) என்பவரை மறித்து சோதனை செய்தனர்.

அப்பொழுது அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்து எடுத்துச் சென்ற மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்பு வழக்கு பதிவு செய்து தாமரைக்கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Stories: