பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்து விபத்து

பாட்னா : பீகாரில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.  பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் கங்கை ஆற்றின் மீது விக்ரம் ஷிலா சேது பாலம் கட்டப்பட்டுள்ளது. 4.7 கிமீ நீளமுள்ள இந்த பாலம் பாகல்பூரையும், நவுகாச்சியாவையும் இணைக்கிறது. இந்த பாலத்தின் பாதுகாப்பு சுவர்கள் மோசமடைந்த நிலையில் இருப்பதை காட்டும் காணொலிகள் கடந்த மார்ச் மாதம் சமூக வலைதளங்களில் வௌியானது.

இதையடுத்து பழுதடைந்த சுவர் விரைவில் புனரமைக்கப்படும் என அப்போதைய சாலை கட்டுமானத்துறை அமைச்சர் திலீப் குமார் ஜெய்ஸ்வால் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அந்த பாலத்தின் ஒருபகுதி இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

Related Stories: