2026 தேர்தல் அதிமுகவுக்கு கடும் பின்னடைவு எடப்பாடி தலைமையில் சந்திக்கும் 11வது தோல்வி

சென்னை: தமிழகத்தில் 2026 தேர்தலில் தவெக 100க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று முன்னிலையில் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் திமுக கூட்டணியும், 3வது இடத்தில் அதிமுக கூட்டணியும் உள்ளது. திமுக மட்டும் தனித்து 60 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக 45 இடங்களை கைப்பற்றி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2021ம் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்து 66 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றியது.

ஆனால், தற்போது அதிமுக 45 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் பழனிசாமி சுமார் 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சென்னை, ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் படுதோல்வி அடைந்து உள்ளார். அவர், இந்த தேர்தலில் டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2021 நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற 66 இடங்களை வைத்து பார்க்கும்போது, தற்போது தேர்தலில் 45 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதுவரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த 10 தோல்வியுடன், இந்த தேர்தலையும் சேர்த்தால் 11வது தேர்தல் தோல்வி ஆகும்.

* முன்னாள் அதிமுக
அமைச்சர்கள் aதமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, ஜெயக்குமார், ஆர்.காமராஜ், கே.டி.ராஜேந்திர பாலாஜி, பொள்ளாச்சி ஜெயராமன், கடம்பூர் ராஜு, மாதவரம் மூர்த்தி, பென்ஜமின் உள்ளிட்டவர்கள் தோல்வி அடைந்தனர்.

* எடப்பாடி பழனிசாமி தலைமையில் இதுவரை சந்தித்த தோல்வி விவரம்:
* 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
* 2019 மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்
* 2019 ஊரக உள்ளாட்சி தேர்தல்
* 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல்
* 2021 ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
* 2023 ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்
* 2024 விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்
* 2024 மக்களவை பொதுத்தேர்தல்
* 2024 விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்
* 2025 ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்
* 2026 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல்

Related Stories: