மதுரை: தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. தென்மாவட்டங்களை பொறுத்தவரை, மீண்டும் அதிமுக கூட்டணி வெற்றி வாய்ப்புகளை அதிக தொகுதிகளில் இழந்துள்ளது.
* ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி ஆகிய தொகுதிகளில் திமுகவும், திருவாடானை தொகுதியில் தவெகவும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை.
* சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய தொகுதிகளில் தவெகவும், திருப்பத்தூர் தொகுதியில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி ெபறவில்லை.
* மதுரை மாவட்டத்தில் மதுரை மத்தி, மதுரை தெற்கு, மதுரை வடக்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் தவெகவும், திருமங்கலத்தில் திமுகவும், மேலூரில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்திலும் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
* விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி ஆகிய தொகுதிகளில் தவெகவும், சாத்தூர், திருச்சுழி, அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது. இங்கும் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி ெபறவில்லை.
* தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, போடி ஆகிய தொகுதிகளில் திமுகவும், கம்பம் மற்றும் பெரியகுளம் தொகுதியில் தவெகவும் வெற்றி பெற்றுள்ளது. இங்கும் அதிமுக வெற்றி பெறவில்லை.
* திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், வேடசந்தூர் திமுகவும், நிலக்கோட்ைடயில் தவெகவும், பழநி மற்றும் நத்தம் தொகுதியில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.
