மக்கள் நம்பும் வரையில் போராடுவோம்: சீமான் பேட்டி

சென்னை: நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எந்த வேட்பாளரும் டெபாசிட் கூட பெறாத நிலையில் தோல்வி அடைந்தனர். இது குறித்து அக்கட்சியின் தலைவர் சீமான் அளித்த பேட்டி: எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது. இவ்வளவு பேசிய பிள்ளைகளுக்கு, இவ்வளவு போராடிய பிள்ளைகளுக்கு, உண்மையும் நேர்மையுமாக இருந்த மற்றும் மாற்று அரசியலை எடுத்து வைத்த பிள்ளைகளுக்கு வாக்களித்து 8 விழுக்காடு கொடுத்திருக்க கூடாதா என்ற வருத்தம் இருக்கிறது.

நான் சட்டப் பேரவைக்குள் போக வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை. நாட்டை வெல்லாமல் 2 அல்லது 3 இடங்களை வென்று ஒன்றும் செய்யப் போவதில்லை. ஆனாலும் போயிருக்கலாம். மக்களின் குரலாகவும் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தில் குரலாக சட்ட மன்றத்தில் பேசியிருக்கலாம். அதற்கான வாய்ப்பு வரவில்லை. அது நமது தோல்வி அல்ல; மக்களின் தோல்வி.

எங்கள் பிள்ளைகளின் உழைப்பு அசாத்தியமானது. இன்னும் 10 ஆண்டுகள் கூட நாம் போராடுவோம். ஆனால் உறுதியாக வெல்வோம். 100 விழுக்காடு மக்களை நம்புகிறோம். மக்கள் நம்மை நம்பும் வரை போராடுவோம். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

Related Stories: