விஜய்யின் முதல் கையெழுத்து எது? பெண்களுக்கு மாதம் ரூ.2,500, ஒரு பவுன் தங்கம், 6 காஸ் சிலிண்டர்கள்: மக்கள் எதிர்பார்ப்பு

சென்னை: தவெக தலைவர் விஜய் முதல்வரானால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500, திருமண உதவித்தொகையாக பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பட்டு சேலை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 இலவச காஸ் சிலிண்டர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன் திமுக, அதிமுக, தவெக சார்பில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது.
அதன்படி, தவெக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள்:
* 60 வயது வரை உள்ள குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும்.
* பெண்களின் திருமணத்திற்காக 8 கிராம் தங்கம் மற்றும் பட்டு சேலை வழங்கப்படும்.
* ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
* 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளின் தாய்க்கு வரும் ரூ.15,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
* அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.
* பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைவாக விசாரிக்கும் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
* ரேஷன் கடைகள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் இலவச விலையில்லா சானிட்டரி பேட்ஸ் வழங்கப்படும்.
* பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் ‘பேபி வெல்கம் கிட்’ வழங்கப்படும்.
* பெண்கள் பாதுகாப்புக்காக ‘ராணி வேலுநாச்சியார் படை’ அமைக்கப்படும்.
* அனைத்து பொது போக்குவரத்தின் எஸ்ஓஎஸ் பட்டன் மற்றும் சிசிடிவி கேமராக்கள் உருவாக்கப்படும்.
* சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா நிதி, எம்எஸ்எம்இ ஆக மாறுபவர்களுக்கு வருடம் ரூ.5 லட்சம் (100 சதவீதம் மானியத்துடன்) வழங்கப்படும்.
* பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றம் தான் எங்கள் முதல் முன்னுரிமை என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் அறிவிப்புகள் தவெக சார்பில் விஜய் அளித்திருந்தார்.

தற்போது, தவெக அதிக இடங்கள் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை விஜய் நிறைவேற்றுவார் என்று தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Related Stories: