காவேரிப்பாக்கம் அருகே நெல் குவியல்கள் மழையில் நனைந்து சேதம்

*வெயிலில் உலர்த்தி பதப்படுத்தும் விவசாயிகள்

காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் அருகே நெல் குவியல்கள் மழையில் நனைந்து சேதமானது. இதனால் விவசாயிகள் நெல்லை வெயிலில் உலர்த்தி பதப்படுத்தினர்.காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் நேற்று அதிகாலை பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி நிலவியது. ஆனால் பெரும்பாலான விவசாயிகள் மத்தியில், திடீர் மழையால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது விவசாயிகள் நவரைப் பருவத்தில் அறுவடை செய்த நெல் மூட்டைகள் மற்றும் நெல் குவியல்கள், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக ஆங்காங்கே பாதுகாத்து வருகின்றனர். இதில் பல்வேறு விவசாயிகள் போதிய இடவசதி காரணமாக தங்கள் விவசாய நிலங்களில் பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் நேற்று அதிகாலை பெய்த திடீர் மழையால் விவசாய நிலங்களில் உள்ள நெல் மூட்டைகள், ஆங்காங்கே தார்சாலையில் உள்ள நெல் குவியல்கள் என மொத்தம் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை கூலி ஆட்கள் உதவியுடன் மழையில் நனைந்த நெல்லை, மீண்டும் வெயிலில் உலர்த்தி பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: