வேலக்குடி பகுதியில் பாசன வாய்க்கால் தூர் வாரும் பணி தீவிரம்

சிதம்பரம் : சிதம்பரம் அருகே உள்ள வேலக்குடி பகுதியில் பாசனத்திற்கு பிரிந்து செல்லும் வாய்க்காலில் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள வேலக்குடி பகுதியில் இருந்து பாசனத்திற்கு பேட்டை வாய்க்கால் உள்ளது.

இவற்றின் மூலம் வேலக்குடி, அகரநல்லூர், பழையநல்லூர், பெரம்பட்டு, திட்டுக்காட்டூர், அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 4500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறுகிறது.

இந்நிலையில் இந்த வாய்க்கால் சில மாதங்களாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை மூலம் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் இந்த வாய்க்காலை, ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாய்க்கால் சுமார் 7 கிலோமீட்டர் அளவிற்கு தூர் வாரப்பட உள்ளதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: