அங்கன்வாடி ஊழியர்கள் தொடர்ந்து 4வது நாளாக காத்திருப்பு போராட்டம்

விருதுநகர், பிப்.26: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் எஸ்தர்ராணி, மாவட்ட செயலாளர் சாரதாபாய் தலைமையில் 4 வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும். முறையான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு  பெறும் போது ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடையாக வழங்க வேண்டுமென்ற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.22ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கடந்த 3 தினங்களாக ஹெலிபேடில் பந்தல் போட்டு காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சம்பவ இடத்திலேயே உணவு சமைத்து போராட்டதை இரவு, பகலாக தொடர்ந்து வருகின்றனர்.நேற்று 4வது நாள் போராட்டத்தில் தொமுச அண்ணாதுரை, முன்னாள் எம்பி அழகிரிசாமி, சிஐடியு மாவட்ட செயலாளர் தேவா உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

Related Stories: