மேற்குவங்கத்தில் முதற்கட்ட தேர்தல்; முர்ஷிதாபாத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: 4 வாக்காளர்கள் படுகாயம்

 

கொல்கத்தா: மேற்கு வங்காள சட்டசபை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவின் போது முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடந்த வன்முறை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேற்கு வங்காள மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலிலும் அமைதியை குலைக்கும் வகையில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பாக முர்ஷிதாபாத் மாவட்டத்திற்கு உட்பட்ட டொம்கல் மற்றும் நவுடா பகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி ஆதரவாளர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர். நவுடா பகுதியில் மர்ம நபர்களால் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. டொம்கல் பகுதியில் உள்ள ராய்பூர் கிராமத்தில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு செல்ல விடாமல் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் வன்முறை நடந்த பகுதிகளில் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

 

Related Stories: