புதுடெல்லி: எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதன் அடிப்படையில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டு வர வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. இந்நிலையில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா கூறுகையில், மகளிர் இட ஒதுக்கீடு: இன்றே அமல்படுத்து, இப்பொழுதே அமல்படுத்து \” என்ற முழக்கத்துடன் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
2029 பொதுத் தேர்தலிலிருந்து இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் இப்போது இருக்கும் 543 உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையிலேயே பெண்கள் இட ஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. இட ஒதுக்கீட்டில் ஓபிசி பெண்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள பெண்கள் பிரதமர் மோடிக்கு தபால் அட்டைகளை அனுப்புகின்றனர். 10 லட்சம் தபால் அட்டைகள் அனுப்புவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் மே மற்றும் ஜூன் மாதங்கள் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.
