வாலிபர் தற்கொலை

கோவை, ஏப். 23: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னாராம் (20). இவர், கோவை ஆர்.எஸ்.புரம் லிங்கப்ப செட்டி வீதியில் தனது சகோதரர் வீட்டில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் அவரை பிரிந்து சென்றதாக தெரிகிறது.

இதனால், பன்னாராம் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். இந்நிலையில், விரக்தி அடைந்த பன்னாராம் கடந்த 19ம் தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Related Stories: