சிறுமுகையில் திமுக வேட்பாளருக்கு கிரீடம் சூட்டி மக்கள் வரவேற்பு

மேட்டுப்பாளையம், ஏப்.18: மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எம்.டி.கவிதா கல்யாண சுந்தரம் நேற்று முன்தினம் காலையில் காரமடை தெற்கு ஒன்றிய பகுதிகளான மருதூர், காளம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். இப்பகுதிகளில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது பொதுமக்கள் காத்திருந்து திமுக வேட்பாளரை உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து மாலையில் சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட மேலூர், மூலத்துறை, கிச்சக்கத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு அப்பகுதி மக்கள் சார்பில் ஆரத்தி எடுத்தும்,மலர் கிரீடம் அணிவித்தும், பூரண கும்ப மரியாதை வழங்கியும் உற்சாகமாக வரவேற்றனர். சிறுமுகையில் திரண்டபொதுமக்கள் இடையே பேசிய திமுக வேட்பாளர் எஸ்.எம்.டி.கவிதா கல்யாண சுந்தரம் தமிழக முதல்வர் முத்தாய்ப்பான பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

இந்த திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் சென்றடைய மேட்டுப்பாளையத்தில் திமுகவை சேர்ந்த ஒரு எம்எல்ஏ தேவை. கோவை மாவட்டத்திலேயே ஒரே ஒரு பெண் வேட்பாளரான எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும். மக்களின் பிரச்னைகள் அனைத்தும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனது வீட்டின் அருகிலேயே அலுவலகமும் அமைந்துள்ளது.

24 மணி நேரமும் மக்கள் தங்களது பிரச்னைகளை நேரில் வந்து தெரிவிக்கலாம். இப்பகுதி மக்களின் முக்கிய பிரச்சனையான குடிநீர் பற்றாக்குறை போக்க முழு வீச்சில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேசினார். இந்த பிரசாரத்தில் சிறுமுகை பேரூராட்சி தலைவர் மாலதி உதயகுமார், பேரூர் கழக செயலாளர் உதயகுமார், ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், காந்தி, சிறுமுகை பேரூர் கழக தேர்தல் பொறுப்பாளர் நவீன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.

 

Related Stories: