பாம்பு கடித்து வாலிபர் பலி

 

கோவை,ஏப்.22: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் கணேஷ்ராஜ் வன்ஷி(26). இவர், தனது உறவினர்கள் சிலருடன் கோவையில் தங்கி பீளமேடு காளப்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். கடந்த 17ம் தேதி இரவில் கணேஷ் ராஜ் வன்ஷி தனது நண்பர் ஒருவருடன் காளப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காலில் பாம்பு கடித்தது. இதனால் பதறிய அவரது நண்பர் உட்பட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கணேஷ்ராஜ் வன்ஷி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Related Stories: