உடலில் தீ வைத்து மூதாட்டி தற்கொலை

பாகூர், ஏப். 23: கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை சுனாமி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் வீரம்மாள் (65). இவர் மகள் கவிதா (45) மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். பிள்ளையார்குப்பத்தில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளராக பணி செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குடல் இறக்கம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து குணமாகி 6 மாதமாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மகள் மற்றும் பேரப்பிள்ளைகள் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர்.

அப்போது வீரம்மாள் யாருக்கும் தெரியாமல் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்துக்கொண்டு எதிரே இருக்கும் காலி மனையில் உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டு வலி தாங்க முடியாமல் கத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு மகள் கவிதா மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து வீரம்மாளை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கவிதா கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: