மொடக்குறிச்சி,ஏப்.18: மொடக்குறிச்சி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதிமுக வேட்பாளர் சா.செந்தில்நாதன் நேற்று மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வீடு வீடாகச் சென்று திமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்தும் தேர்தல் வாக்குறுதிகள் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளர் செந்தில்நாதன் பேசுகையில்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
மேலும் தமிழக அரசின் திட்டங்கள் தொடரவும் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் மொடக்குறிச்சி தொகுதி மக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன். எனவே அனைவரும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பிரசாரத்தின் போது திமுக ஒன்றிய திமுக செயலாளர்கள் குணசேகரன், கதிர்வேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
