ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்

 

டோக்கியோ: ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. வடக்கு ஜப்பானின் சன்ரிகு கடற்பகுதி அருகே கடலுக்கு அடியில் சுமார் 10கி.மீ- ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்ததாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுமார் 10 அடி உயரம் வரையில் சுனாமி அலைகள் எழக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

Related Stories: