மலேசியாவை புரட்டிப்போட்ட பேரழிவு.. 1000 வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பல்

மலேசியாவில் வரலாறு காணாத அளவு ஏற்பட்ட காட்டுத்தீயால் 9000திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் சபா (Sabah) மாநிலத்தில் உள்ள சண்டகன் (Sandakan) மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், கடல் நீர்மட்டம் குறைவாக இருந்ததாலும் பலத்த காற்று வீசியதாலும் தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. அதோடு புதிதாக பல இடங்களுக்கும் தீ பரவிய நிலையில் பல ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கடற்கரையோரம் மரத்தூண்களில் கட்டப்பட்டிருந்த சுமார் 1000 வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகியதாகவும் 9000திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மலேசியா வானிலை ஆய்வு மையத் தகவலில் 2026 ஆண்டு எல்-நினோ மற்றும் வெப்ப அலை காரணமாக மலேசியாவில் வெப்ப நிலை 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. இதனால் காடுகள் மிகவும் காய்ந்து எளிதில் தீப்பற்றும் நிலையில் உள்ளதால் இந்த பேரழிவுக்கு காரணம்.

2026 ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 12,938 தீ விபத்துகள் பதிவாகியுள்ளது. இது கடந்த
ஆண்டை விட அதிகம் என்றும் மலேசியா தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீ காரணமாக மலேசியாவில் பல பகுதிகளில் காற்று தரம் மோசம் அடைந்துள்ளதால் மக்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளே இருக்கவேண்டும் என்று மலேசியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: