பொன்னமராவதி,ஏப்.19: பொன்னமராவதி பகுதியில் திமுகவினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதிக்கு வாக்குகள் சேகரித்து கற்பகவிநாயக கல்வி நிறுவனங்களின் இயக்குநர் மீனாட்சி அண்ணாமலை பகவாண்டிப்பட்டி, காட்டுப்பட்டி, பி.உசிலம்பட்டி, வேகுப்பட்டி ஆகிய ஊராட்சி ஆகிய இடங்களில் பொது மக்களைச்சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.
இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், முன்னாள் ஊராட்சித்தலைவர் அழகப்பன், பேரூராட்சி கவுன்சிலர் சாந்தி ஜெயராமன், திமுக சமூக வலைதள பிரிவு முன்னாள் நிர்வாகி ஆலவயல் முரளிசுப்பையா, ஒன்றிய பொருளாளர் சுப்பையா, மருது, அண்ணாமலை, உட்படபலர் கலந்து கொண்டனர்.
