பெரியநாயக்கன்பாளையத்தில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

பெ.நா.பாளையம், ஏப்.14: தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி வாக்குப்பதிவில் பங்கேற்க காவல் துறையினர் கொடி அணிவிப்பு ஊர்வலம் நடைபெற்றது. கஸ்தூரிபாளையத்தில் தொடங்கிய கொடி அணிவகுப்பை ஏஎஸ்பி இன்பா, பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னுசாமி ஆகியோர் துவங்கி வைத்தனர்.

ஊர்வலத்தில், தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பேண்டு வாத்திய இசையுடன் தொடங்கிய கொடி அணிவகுப்பு ஐந்து முக்கு, அகிலா பேக்கரி, பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையம், ஜங்ஷன் வழியாக கே ஆர் மருத்துவமனையில் முடிவடைந்தது. இதில், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், தடாகம் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பழனியம்மாள், உதவி ஆய்வாளர்கள் உள்பட எல்லை பாதுகாப்பு படையினர், மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: