கோவை சூலூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட த.வெ.க. வேட்பாளர் சுகுமாரிடம் பெண்கள் சரமாரி கேள்வி

 

கோவை: கோவை சூலூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட த.வெ.க. வேட்பாளர் சுகுமாரிடம் பெண்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். வார சந்தையில் பெண்களிடம் தவெக வேட்பாளர் சுகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விஜய் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என தவெக வேட்பாளர் பரப்புரை செய்தனர்.

சொந்த குடும்பத்தையே பார்க்காத விஜய், மக்களை எப்படி பாதுகாப்பார் என த.வெ.க. வேட்பாளரிடம் கேள்வி. தன் ரத்த உறவுகளையே பார்க்காத விஜய், தமிழ்நாட்டு மக்களை எப்படி கவனிப்பார். காய்கறி வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி தவெக வேட்பாளர் ஆதரவு திரட்டியபோது வாக்குவாதம் செய்தனர். பெண்களின் சரமாரி கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் த.வெ.க. வேட்பாளர் சுகுமார் திணறினார். த.வெ.க. நிர்வாகிகள், பெண்களை சமாதானம் செய்ய முயன்றும் சரமாரி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறல்.

மக்களால் தேர்வான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விஜய் விமர்சிக்கும் விதத்தை ஏற்க முடியாது என பெண்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் சார் என்றுதானே கூறுகிறார் என வேட்பாளர் பதில் சொன்னபோதும் அதனை ஏற்க மறுத்து பெண்கள் கண்டனம். தவெகவில் உள்ள சிறிய வயதினர் கூட, ஒரு தலைவரான முதலமைச்சரை விமர்சிப்பது சரியா என்று கேள்வி எழுப்பினர்.

த.வெ.க.வில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் கேவலமாக பேசுவதை விஜய் ஏன் கண்டிக்கவில்லை என பெண்கள் கேள்வி. விஜயகாந்தை விட விஜய் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு சரிவர பதில் சொல்லாமல் பரப்புரையை பாதியிலேயே முடித்துக்கொண்டு த.வெ.க. வேட்பாளர் கிளம்பினார்.

 

 

Related Stories: