×

ரூ.23 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் 51 பறக்கும் படைகளும், 51 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் மூன்று சுழற்சி முறைகளில் தேர்தல் கண்காணிப்பு பணிகளை ஈடுபடுகின்றனர். இந்த குழுக்கள் தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்காணித்து அதன் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதனடிப்படையில் நேற்று பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையின்போது ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.1,28,400, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.1,06,000, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.1,40,000, எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.16,74,489, வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் ரூ.1 லட்சம் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகான சோதனையின்போது, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் ரூ.74,500, மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.85 ஆயிரம் என மொத்தம் ரூ. 23,08,389 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Chennai district ,
× RELATED செல்போனில் எப்போதும் அரட்டை: கணவர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை