×

இலங்கை சிறைபிடித்த 15 மீனவர்கள் விடுதலை: 2 மீனவர்களுக்கு 3 மாதம் சிறை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த பிப். 19ம் தேதி 2 விசைப்படகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள் விமல்ராஜ், தபோன் ராஜா, பாக்கியராஜ், தீபக், ஆரோக்கிய பிரச்சிஸ், இமானுவேல், சந்தியா ஸ்டூவர்ட், பாக்லின், அந்தோணி குணால், காளிதாஸ், சந்தியா ஆல்டன், வின்சர் ஆகிய 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களது காவல் நேற்று முடிந்ததால் 12 பேரும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்கள் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டால் அபராதத்துடன் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 8 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார். மீண்டும் சிக்கிய மீனவர்கள் இரண்டு பேருக்கு தலா ரூ.7,350 அபராதம், இரண்டு படகோட்டிகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 26ம் தேதி கடலுக்குச் சென்ற சசிக்குமார், சிம்சன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை கைப்பற்றி படகிலிருந்த 7 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிபதி 7 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலையான 15 மீனவர்களும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஓரிரு நாட்களில் இவர்கள் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Sri Lanka ,Rameswaram ,Vimalraj ,Thapon Raja ,Pakiyaraj ,Deepak ,Arogya Prachis ,Emanuel ,Sandhya Stuart ,Baglin ,Anthony Kunal ,Kalidas ,Sandhya Alton ,
× RELATED ஐபிஎல் போட்டியை காண மெட்ரோ ரயிலில்...