- எடப்பாடி
- முதல் அமைச்சர்
- கே.வி.தங்கபாலு
- சென்னை
- முன்னாள்
- தமிழ்நாடு காங்கிரஸ்
- ஜனாதிபதி
- கே. விதங்கபாலு
- திருவள்ளூர் காங்கிரஸ்
- திமுக
- இந்தியா
சென்னை: முதல்வர் குறித்து பேசி வரும் எடப்பாடி பழனிசாமி பண்பாட்டோடு பேச வேண்டும் என்று கே.வி.தங்கபாலு தெரிவித்தார். திருவள்ளூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.விதங்கபாலு, நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக தலைமையில் உள்ள இந்தியா கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெறும். இந்திய மாநிலங்களில் தமிழகம் முதன்மை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் பெறாத வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது.
தமிழ்நாடு எல்லா நிலைகளிலும் உயர்ந்துள்ளது. முதல்வரை பெருமையாக பார்க்கிறேன். 200க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். மீண்டும் ஸ்டாலின் தான் முதல்வராக வருவார். இந்தியா கூட்டணியில் 25க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளதால் பலமான கூட்டணி, இது வெற்றி கூட்டணி, எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவோம் என கூறுவார்கள். கள நிலவரத்தை பார்க்க வேண்டும்.
1967க்கு பிறகு முதல்வர் அமைத்துள்ள கூட்டணி பலமான கூட்டணி. விஜய் அரசியலுக்கு புதியவர். காங்கிரசை பற்றி அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. காங்கிரஸ், திமுக வெற்றி பெற்ற போதும், தோல்வி அடைந்த போதும் ஒன்றாக இருந்திருக்கிறோம். நல் புரிதலோடு உள்ளது இந்தியா கூட்டணி. தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பண்பாட்டோடு பேச வேண்டும். பாஜ மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்படுகிறது. இந்தியாவில் மிக தைரியமான முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான், பாஜ தான் தமிழத்திற்கு எதிர்கட்சி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
