×

விஜய்யின் வடலூர் பிரசாரம் மீண்டும் ரத்து

வடலூர்: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் கடலூர் மாவட்டத்தில் 9ம்தேதி பிரசாரம் செய்வார் என முதலில் அறிவிக்கப்பட்டது. கடந்த 2 நாளாக கடலூர் தவெக வேட்பாளர் ராஜ்குமாரின் உறவினர் கடை மற்றும் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், புதுச்சேரி வாக்குப்பதிவை காரணம் காட்டி பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று வடலூரில் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் மீண்டும் விஜய்யின் வடலூர் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. வடலூர் பிரசாரத்தின் மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர். காரைக்குடியில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட விஜய், இன்று வீட்டில் ஓய்வு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Vijay ,Vadalur ,TDP ,Cuddalore ,Tamil Nadu Assembly ,Income Tax Department ,Rajkumar… ,
× RELATED ஐபிஎல் போட்டியை காண மெட்ரோ ரயிலில்...