×

ஜவுளி கடைகளில் ஐடி அதிரடி ரெய்டு

கோவை: கோவை காந்திபுரம் டவுன் பஸ்நிலையம் எதிரே சிவா டெக்ஸ்டைல் செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று காலை 11 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்த வந்தனர். வரி ஏய்ப்பு புகார் காரணமாக இந்த சோதனை நடந்தது. சோதனையை முன்னிட்டு கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

கடையின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டு ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இதேபோல, திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள சிவா டெக்ஸ்டைல் மற்றும் வளர்மதி பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஆனந்தம் ஜவுளிக்கடையிலும் முறையாக செலுத்தாமல் வரிஏய்ப்பு செய்வதாக வந்த புகாரின்பேரில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சேலம் 4 ரோடு பகுதியில் பிரபல ஜவுளி கடையிலும் சோதனை நடந்தது.

Tags : Coimbatore ,Siva Textile ,Gandhipuram Town Bus Stand ,
× RELATED ஐபிஎல் போட்டியை காண மெட்ரோ ரயிலில்...