×

11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்தோம்: காஞ்சிபுரத்தில் எடப்பாடி பேச்சு

சென்னை: காஞ்சிபுரம் தேரடி சாலையில் அதிமுக வேட்பாளர்கள் வி.சோமசுந்தரம் (காஞ்சிபுரம்), கே.பழனி (ஸ்ரீபெரும்புதூர்), பாமக பெ.மகேஷ்குமார் (உத்திரமேரூர்) ஆகியோருக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக கூட்டணி கட்சியினரோடு இணைந்து ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது.

சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கஷ்டப்பட்டு உருவாக்கிய அதிமுகவில் முதல்வர் பதவி உள்பட உயர் பதவிகளில் இருந்த ஒருவர் இப்போது திமுகவில் இணைந்து விட்டார். வெட்கம், மானம் இல்லாமல் போய் விட்டது. 2021 தேர்தல் அறிக்கையிலேயே மாதம்தோறும் ரூ.1000 மகளிர்க்கு வழங்குவோம் என்று அதிமுக சார்பில் முதலில் சொல்லியிருந்தோம்.

தற்போது அதிமுக மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம் தருவதாக சொல்லி இருக்கிறோம். அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் 11 மருத்துவக்கல்லூரிகள், 6 சட்டக்கல்லூரிகள் உள்பட பல கல்லூரிகளை தொடங்கினோம்.  மக்களைப்பற்றி எதுவும் பேசவில்லை. என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் தரம் தாழ்த்தி பேசினால் நான் அவர்களை எதிர்த்து 10 மடங்கு அதிகமாக பேசுவேன்.

அதிமுக பாஜவுக்கு அடிமையாகி விட்டது, அமித்ஷா சொல்றதைத்தான் கேட்பார் என்கிறார்கள். எனக்கு சுயபுத்தி இருக்கிறது. நான் யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சாவை வேரோடு அழித்துக் காட்டுவோம். போதை தமிழகத்திலிருந்து தமிழகத்தை மீட்டு எடுப்போம். இவ்வாறு பேசினார்.

Tags : Edappadi Palaniswami ,Kanchipuram ,Chennai ,AIADMK ,General ,V. Somasundaram ,K. Palani ,Sreeperumbudur ,PMK ,P. Maheshkumar ,Uthiramerur ,Kanchipuram Theradi Road ,
× RELATED ஐபிஎல் போட்டியை காண மெட்ரோ ரயிலில்...