சென்னை: 2026ல் பாதுகாக்கப்பட்ட மீட்டெடுக்கக்கூடிய மாற்ற முடியாத கடன் பத்திரங்களின் (NCD) தனது சமீபத்திய பொது வெளியீட்டை ஐசிஎல் பின்கார்ப் புதிய கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான, நிறுவனம் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: எங்கள் முந்தைய என்சிடி வெளியீடுகளுக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வரவேற்பை தொடர்ந்து, முதலீட்டாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் உண்மையிலேயே கவுரவிக்கப்படுகிறோம்.
இந்த தொடர்ச்சியான ஆதரவு, எங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப இன்னும் வலுவான நிதிசார் தீர்வுகளை வழங்க எங்களை ஊக்குவிக்கிறது. இந்த என்சிடி வெளியீடு ஏப்ரல் 24, 2026 வரை திறந்திருக்கும் மற்றும் இது ACUITE BBB- / STABLE என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு என்சிடி-ன் முக மதிப்பு ரூ.1,000. மேலும் இந்த வெளியீடு 13, 24, 36, 60 மற்றும் 72 மாத கால அளவுகளைக் கொண்ட 10 விருப்பங்களை (10 ISINகள்) வழங்குகிறது. இது மாதாந்திர, வருடாந்திர மற்றும் ஒட்டுமொத்த வட்டி விருப்பத் தேர்வுகளுடன் 10% முதல் 12.25% வரை வட்டி விகிதங்களை கொண்டுள்ளது.
குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை ரூ.10,000. இது பரந்த அளவிலான முதலீட்டாளர்களுக்கு அணுகக்கூடியதாக அமைகிறது. இந்த வெளியீட்டிலிருந்து கிடைக்கும் வருமானம், ஐசிஎல் பின்கார்ப்-ன் வளர்ச்சி முன்னெடுப்புகளை ஆதரிப்பதற்கும், இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் மூலோபாய ரீதியாகப் பயன்படுத்தப்படும்.
நம்பகமான, புதுமையான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதி தீர்வுகளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 35 ஆண்டுகால பாரம்பரியத்துடன், ஐசிஎல் பின்கார்ப் CMD, Adv. கே.ஜி. அனில்குமார், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோரின் தொலைநோக்கு தலைமையின் கீழ் நம்பகமான நிதி கூட்டாளராக. எங்கள் சேவைகளை பன்னிரண்டு மாநிலங்களுக்கு விரிவாக்கியுள்ளோம்.
கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, குஜராத், மேற்குவங்கம், கோவா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய 12 மாநிலங்களில் எங்களது இருப்பு விரிவடைந்து வருவதன் மூலம், நாங்கள் படிப்படியாக அகில இந்திய அளவில் தடம் பதித்து வருகிறோம் ஐசிஎல் குழுமத்தின் கீழ் BSE-யில் பட்டியலிடப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனமான (NBFC) Salem Erode Investments, எங்களது ஒரு முக்கிய அங்கமாக மாறி, எங்களது மதிப்பை மேம்படுத்துகிறது. ஐசிஎல் பின்கார்ப் நிறுவனம் தங்க, வணிகக் கடன் உள்ளிட்ட விரிவான சேவை வழங்குகிறது. ஐசிஎல் குழுமம் பயணம், பேஷன், நோயறிதல் மற்றும் தொண்டு முயற்சிகள் போன்ற துறைகளிலும் தடம் பாதித்துள்ளது.
