×

வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீடு 70 சதவீதம் அதிகரிப்பு: ஐஓசி தலைவர் சஹானி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் எரிபொருள் சப்ளை நிலவரம் குறித்து இந்திய எண்ணெய் கழகத்தின் (ஐஓசிஎல்) தலைவர் ஏ.எஸ்.சஹானி சென்னையில் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: சுத்திகரிப்பு திறன்கள் ஏறத்தாழ முழு அளவில் இருப்பதால் பெட்ரோல், டீசல், விமானத்திற்கான எரிபொருள் உட்பட எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் இல்லை. நாள்தோறும் சுமார் 5 லட்சம் எல்.பிஜி சிலிண்டர்கள் என்ற மாநிலத்தின் சமையல் எரிவாயு தேவையை 100 சதவீதம் பூர்த்தி செய்யும் நிலையில் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. வீட்டு உபயோக சமையல் எரிவாயுக்கு அதிகபட்ச முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சில பகுதிகளில் 6 முதல் 8 நாட்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதை குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய பகுதிகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் 100 சதவீத தேவைப் பூர்த்தி செய்யப்படுகிறது. பதுக்கல் மற்றும் முறைகேடுகளை தடுக்க மாநில அரசு 10,000-க்கும் அதிகமான திடீர் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் எண்ணெய் நிறுவனங்களும் 1,500-க்கும் அதிகமான திடீர் சோதனைகளை தமிழ்நாடு முழுவதும் நடத்தி உள்ளன. மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய போதிய கச்சா எண்ணெய் இருப்பில் உள்ளதால் எரிபொருட்கள் வாங்குவது தொடர்பாக மக்கள் பீதியடைய வேண்டாம். இவ்வாறு சஹானி கூறினார்.

* சென்னையில் சமையல் காஸ் தட்டுப்பாடா?
சென்னை புறநகர் பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவித்த போது, இது குறித்து விரிவானப் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாளில் இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று சஹானி தெரிவித்தார்.

Tags : IOC ,Sahani ,Chennai ,Indian Oil Corporation ,IOCL ,A.S. Sahani ,Tamil Nadu ,
× RELATED செல்போனில் எப்போதும் அரட்டை: கணவர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை