ஆடுகள் விற்பனை அமோகம்

அரூர், ஏப்.11: அரூர் அருகே கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. சந்தையில் ஆடு, கோழிகளை வாங்க விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும், விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். சந்தையில் 190க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு ஆடு ரூ.7,500 முதல் ரூ.10,200 வரை விற்பனையானது. ஆகமொத்தம் ரூ.28 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: