இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்தநாள் விழா

குமாரபாளையம், ஏப்.7: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாள் விழா, குமாரபாளையம் நாராயணா நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியா் பாரதி தலைமை தாங்கி பேசினார். உதவி தலைமை ஆசிரியர் நவநீதன் முன்னிலை வகித்தார். நம்மாழ்வாரின் சிறப்பு, வேளாண்மை துறையில் அவர் மேற்கொண்ட மண், விதை பாதுகாப்பு குறித்து ஆசிரியர் ரதி விளக்கிப் பேசினார். நம்மாழ்வாரின் படத்திற்கு பள்ளி குழந்தைகள் மலர்தூவி மரியாதை செய்தனர். நம்மாழ்வார் வாழ்க்கை வரலாறு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வினாடி-வினா, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. விடியல் சேவை அமைப்பின் தலைவர் பிரகாஷ் பரிசு வழங்கினார். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்துவோமென குழந்தைகள் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் ஆரோக்கிய பிரபு, ராஜாமணி, ஜெயந்தி, தினக்கல்வி சசி, தீனா, ஜமுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: