கல்லூரிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி

பள்ளிபாளையம், ஏப்.7: காகித ஆலை குடியிருப்பில் கல்லூரிகளுக்கிடையேயான கைப்பந்து போட்டிகளில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளிபாளையம் காகித ஆலை காலனியில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் முதல் பரிசினை டிஜி வைஷ்ணவா கல்லூரி தட்டிச்சென்றது. இரண்டாம் பரிசினை பணிமலர், மூன்றாம் பரிசினை கற்பகம், நான்காம் பரிசினை எஸ்டிஏடி அணிகள் வென்றன. பெண்களுக்கான போட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியினர் வென்றனர். இரண்டாம் பரிசினை பனிமலரும், மூன்றாம் பரிசினை பிகேஆர் அணியும், நான்காம் பரிசினை செயின்ட் ஜோசப் அணியும் வென்றன. காகித ஆலையின் இயக்குனர் கணேஷ் பாலகிருஷ்ணன் பத்தி பங்கேற்று பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மனமகிழ் மன்ற தலைவர் அழகர்சாமி, உப தலைவர் ராஜாசுந்தரம், செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: