சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன்தினம் இரவு தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது ‘தமிழக அரசியல் இலவசத்தை கொடுத்து மக்களை கெடுக்கிறார்கள் என்பது குறித்த சினிமா பட கதையை வீடியோவாக போட்டு பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் விதிமுறைப்படி பிரசாரம் 10 மணிக்குள் முடிக்க வேண்டும். ஆனால், இரவு 10 மணி ஆனதால் இன்ஸ்பெக்டர் அவரிடம் சென்று நேரமாகிவிட்டது பிரசாரத்தை முடியுங்கள் என்றார். உடனே ஆவேசமான சீமான், காவல் ஆய்வாளரிடம் மேடையில் இருந்தபடியே திட்டினார். 10.16 மணி வரை அவர் பிரசாரம் மேற்கொண்டதால், சீமான் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
கூட்டம் முடிந்ததும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனால் பெரும் பதற்றம் நிலவியது. அதை தொடர்ந்து போலீசார் அவர்களை தடுத்து திருப்பி அனுப்பினார். இது பரபரப்பு ஏற்படுத்தியது.
