சென்னை: இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் தேர்தல் ஆணையத்திடம் நேற்று வழங்கிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அம்பேத்கரின் 136வது பிறந்த நாள் 14ம்தேதி கொண்டாடப்பட உள்ளது.. அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள்.
இது தொன்று தொட்டு நடைபெற்று வரும் மரபாக இருந்து வருகிறது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி அம்பேத்கர் பிறந்த நாள் விழாக்களுக்கு அனுமதி வழங்குவதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. எனவே ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனுமதி வழங்க ஆணை பிறப்பிக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
