சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் எனது ஆதரவு பெற்ற 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், 30 வேட்பாளர்களின் பெயரை வெளியிட்டு அவர்களுக்கு வாக்களிக்க ராமதாஸ் கேட்டுள்ளார். மேலும் அவரது ஆதரவு பெற்ற ஐந்து வேட்பாளர்களுக்கு பச்சை மிளகாய், கிரிக்கெட் பேட், பேபி வாக்கர் உள்ளிட்ட சின்னங்களில் வாக்களிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
