தாலுகா ஆபீசில் குடிநீர் இல்லை

இளையான்குடி, பிப். 21: இளையான்குடி தாலுகா ஆபீசிற்கு 55 ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 180 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், முதியோர் மற்றும் மாணவ, மாணவிகள் தினந்தோறும் சான்றிதழ் கேட்டு வந்து செல்கின்றனர். இவர்கள் குடிப்பதற்கு குடிநீர் வசதி போதுமான அளவு இல்லாததால் பெட்டிக்கடை, ஹோட்டல் என அலைகின்றனர். அங்கு சென்றாலும் சுத்தமான தண்னீர் கிடைப்பதில்லை அதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

தற்போது நிலவும் அனல் பறக்கும் வெப்பத்தால் மனுகொடுக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாகம் தீர்க்க குடிநீர் இல்லாததால் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தாலுகா ஆபீசிற்குள்  குடங்களில்  வைக்கும் குடிநீர் போதுமான அளவு  இல்லாததால், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும்பாலும், பாட்டிலில் அடைத்து வந்து குடிக்கின்றனர். எனவே, தாலுகா ஆபீஸ் வளாகத்தில் நிரந்தரமான சுத்தமான குடிநீர் வசதி அமைக்க மாவட்ட கலெக்டர் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: