சென்னிமலை அருகே வாய்க்காலில் மூதாட்டி சடலம் மீட்பு

 

ஈரோடு,ஏப்.7: காஞ்சிக்கோவில் காந்தி நகரை சேர்ந்தவர் ஈஸ்வரி (60). இவரது மகன் சத்திவேல் (40). எலக்ட்ரீசியன். இவர் தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு பணம் கொடுப்பதில்லை. கடந்த 3ம் தேதி இரவு அளவுக்கு அதிகமாக மதுபோதையில் சத்திவேல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கும், ஈஸ்வரிக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின், திடீரென ஈஸ்வரி மாயமானார்.
அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் காணவில்லை. இதுகுறித்து கடந்த 4ம் தேதி காஞ்சிக்கோவில் போலீசில் சத்திவேல் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் மாயமான ஈஸ்வரியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சென்னிமலை வாயக்கால் புதூர் பகுதியில் உள்ள எல்பீபி வாய்க்காலில் ஈஸ்வரி நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து சத்திவேல் அளித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: