நீதிமன்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு, ஏப். 7: ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன் தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரங்கராஜ் தலைமை தாங்கினார். இதில், தஞ்சாவூர் நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஜெயலட்சுமி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க துணை தலைவர் சம்பூர்ணம் உட்பட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: