ஜெயங்கொண்டம் பகுதிகளில் இணையவழி மின்கட்டண செலுத்தும் சேவைகள் 2 நாட்கள் நிறுத்தம்

ஜெயங்கொண்டம், ஏப். 9: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மின்சார கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இணையவழி மின்கட்டண செலுத்தும் மற்றும் புதிய மின்சார இணைப்பு விண்ணப்ப சேவைகள் 11,12 ஆகிய இரண்டு தேதிகளில் நிறுத்தம் படுவதாக ஜெயங்கொண்டம் மின்வாரிசெயற்பொறியாளர் அய்யனார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் நுகர்வோர் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் கணினி தரவு வழங்கிகளை (சர்வர்களை) படிப்படியாக புதிதாக மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், திருச்சி மண்டலம், ஜெயங்கொண்டம் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அலுவலக இணையவழி மின்கட்டண செலுத்தும் மற்றும் புதிய மின்சார இணைப்பு விண்ணப்ப சேவைகள் வரும் 2026 ஏப்ரல் 11ம்தேதி(சனிக்கிழமை) காலை 6:00 மணி முதல் 12ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 12 மணி வரை இயங்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Related Stories: