மதுரை ஏப். 10: மதுரை – திண்டுக்கல் ரோடு, விளாங்குடியில் கார் சர்வீஸ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்கு, நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர். இதில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து சர்வீஸ் சென்டர் மேலாளர் கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு வாலிபர்கள் காருக்கு தீ வைத்திருப்பது தெரியவந்தது. போலீசார், அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
